மாவீரர் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் மாவீரர் புகழ்பாடும் கார்த்திகைச் சாரல் இசை நிகழ்வும் எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் நாள் சனிக்கிழமை நண்பகல் தொடக்கம் மாலை வரை தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பேர்த் நகரில் நடைபெறவுள்ளது.

தாயகத்தின் விடுதலைக்காகத் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோரையும், அவர்களின் குடும்பத்தினரையும் மதித்துப் போற்றும் இந்நிகழ்வில், பேர்த் மாநிலத்தில் வாழும் அனைவரையும் அன்புடனும் மரியாதையுடனும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.

இந்நிகழ்வின் மேலதிக விபரங்கள் விரைவில் அறித்தரப்படும்.

அனைவரும் ஒன்றிணைந்து, மாவீரர்களின் தியாகத்தையும் அவர்களின் குடும்பத்தினரின் அர்ப்பணிப்பையும் மதித்துப் போற்றுவோம்.

நிர்வாகம்

தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை

பேர்த், மேற்கு அவுஸ்திரேலியா

Leave a Reply

Trending