தமிழீழப் போராட்ட வரலாற்றில் அகிம்சைத் தீயை மூட்டிய தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 39 வது தமிழீழ வான் படையின் தந்தை என அழைக்கப்படும் கேணல் சங்கர் அவர்களின் 25வது ஆண்டு நினைவெழுச்சி நாள் நிகழ்வு பேர்த் மேற்கு அவுஸ்ரேலியாவில் சிறப்புற நடைபெற்றது.
26.09.2026 சனிக்கிழமை மாலை மணி 6.00க்கு Thornlie Park Center Thornlie 6108 WA எனும் முகவரியில் ஆரம்பமான இந்நிகழ்வில் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கான ஈகைச் சுடரினை திருமதி ஜெயதாஸ் விஜயராணி அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழத் தேசியத் தலைவர் உட்பட அனைத்து மாவீரர்களுக்கும் மற்றும் இப்போராட்ட காலத்தில் இலங்கை இந்திய ஆதிக்க சக்திகளால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களது திருவுருவப் படங்களுக்கு நிகழ்வில் கலந்து கொண்டோர் மலர்வணக்கம் செலுத்தினர்.
நிகழ்வில் இளையோர்களினால் கவிதை பாடல் மற்றும் சிறப்புரை என்பன இடம் பெற்றன. செல்வன் ஜெனிஸ்கர் சாந்தகுமார் அவர்களின் தியாகதீபம் அவர்களை பற்றிய நினைவுரையும், தொடர்ந்து செல்வி நிலீசா செந்துாரன் மற்றும் ரூபிகா ரவி அவர்களின் தியாகதீபம் நினைவெழுச்சி நாள் சிறப்பு கவிதைகளும் இடம்பெற்றது.
நிகழ்வில் செல்வன் சஞ்ஜய் சிவசாந்தன் அவர்களின் நினைவு நாள் சிறப்புரை வாசிக்கப்ட்டது. அதனைத் தொடர்ந்து செல்வி லட்சகி விமலாதித்தன் அவர்களினால் தியாக தீபம் பற்றிய எழுச்சிப்பாடல் பாடப்பட்டு நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தன. செல்வி யதுர்சிகா ரகுநாதன் அவர்கள் இந் நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்புற தொகுத்து வழங்கினார்.

















Leave a Reply