கார்த்திகை மாதம் 26ம் திகதி தமிழுழகம் போற்றும் ஒப்பற்ற தலைவர் மேதகு அவர்களின் பிறந்தநாள் உலகெங்கும் வாழும் தமிழர்கள் வெகு விமர்சையாக கொண்டாடிய அதே வேளை மேற்கு அவுஸ்ரேலியாவிலும்
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 72வது அகவை நாள் தமிழ்த் தேசியக் கலைபண்பாட்டுப் பேரவை ஒழுங்கமைப்பில் சிறப்புற நடைபெற்றது.
26/11/2026 வியாழக்கிழமை மாலை 7:00 மணிக்கு Gosnells RSL hall மண்டபத்தில் தமிழினத்தின் தன்னிகரில்லா தலைவர் மேதகு அவர்களின் பிறந்த நாளை சிறுவர் சிறுமியர் கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.
நிகழ்ச்சியில் தானைத்தலைவனின் புகழ் பேற்றும் எழுச்சிப் பாடல்கள் பாடப்பட்டதுடன் சிற்றுண்டிகளும் இரவு நேர உணவும் பரிமாறப்பட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் 9:00 மணியளவில் நிறைவுக்கு வந்தன.













Leave a Reply