தமிழின போராட்ட வரலாற்றின் தடை நீக்கிகளான நெருப்பு மனிதர்களை நினைந்துருகும் புனித நாளான யூலை 05 கரும்புலிகள் நாள் மேற்கு அவுஸ்ரேலியா பேர்த்தில் மிகவும். உணவுபூர்வமாக நடைபெற்றது.

நிகழ்வில் மாவீரர்களுக்கான ஈகைச்சுடரினை திரு சாந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து தாயக விடுதலைப் போரின் தடைநீக்கிகளான கரும்புலி மாவீரர்களுக்கான மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் நிகழ்வில் வைக்கப்பட்டிருந்த கரும்புலிகளின் பொது திருவுருவப் படத்திற்கு தமது மலர்வணக்கத்தை செலுத்தினர்.

தொடர்ந்து கரும்புலிகளின் நினைவுகளை தாங்கிய நினைவுரைகள் இடம்பெற்று நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவுபெற்றன. கரும்புலிகள் நாள் நிகழ்வினை திரு அமுதன் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்.

Leave a comment

Trending