தமிழின விடுதலையின் தடைநீக்கிகளாக உயர்ந்து் நிற்கும் உன்னத மனிதர்களை போற்றி துதிக்கும் நாளான கரும்புலிகள் நாள் எதிர்வரும் 05/07/2026 அன்று பேர்த்தில் இடம்பெறவுள்ளது.
1987ம் ஆண்டு யூலை 05 ம் நாள் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் முகாமிட்டிருந்த ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கு எதிரான தற்கொடைத் தாக்குதலுடன் தமிழின விடுதலை பாதை புதுப் பரிணாமம் பெறுகிறது.
பெரும் படை பலத்தை தமது மனவுறுதியால் தகர்த்து விடுதலைக்கு உரமூட்ட புறப்பட்டு கடலிலும் தரையிலுமாக பல நூற்றுக்கணக்கான கரும்புலிகள் தம்மை ஆகுதியாக்கி உள்ளனர்.
இம்மா வீரர்களை எம் மனக்கண்ணால் கண்டு அகவணங்கும் இன்நாளில் அனைவரும் ஒன்றுகூடி அக் கரும்புலி மா வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.
காலம்: 05/07/2026
ஞாயிற்றுக்கிழமை
மாலை மணி 6:00
இடம்: Thornlie park centre
50 Thornlie Ave Thornlie 6109






Leave a comment