நான்காம் ஈழப்போரின் இறுதிச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் முதுபெரும் தளபதியுமான திரு. பொட்டு அம்மான் அவர்கள் உட்பட ஒரு தொகுதி மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு சுவிற்சர்லாந்து, பிரித்தானியா, பிரான்சு, கனடா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் வரும் 02.05.2026 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
அவ்வகையில் பேர்த் மேற்கு அவுஸ்ரேலியாவில் எதிர்வரும் 02.05.2026 சனிக்கிழமை மாலை 3:30 மணிக்கு இவ் வீரவணக்க நிகழ்வு இடம் பெறும்.
இடம்: 50 Thornlie Ave Thornlie 6108
Western Australia
தமிழினத்தின் விடிவிற்காக இறுதிவரை, தீரமுடன் போராடித் தமிழீழ மண்ணில் வீரகாவியமான இம்மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு, எமது வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.
நன்றி.
நிர்வாகம்
தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை






Leave a comment