இலங்கை பேரினவாத சிங்கள அரசு தமிழீழ மக்கள் மீதான இனவழிப்பின் உச்சம் தொட்டதான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 12வது ஆண்டு நினைவு நாள் 18.05.2021.

தமது மரபுவழித் தாயகத்தில் வாழ்ந்த மக்களை அவர்களின் உரிமை போராட்டத்தை அடக்கி ஒடுக்கும் முகமாக பன்னாட்டு ஆதரவுடன் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி மிகப் பெரிய மனிதப் பேரவலத்தை சிறிலங்கா இனவாத அரசு நடத்தி முடித்திருக்கின்றது.

12 ஆண்டுகளாக சர்வதேச நீதி வேண்டி அமைதிவழிப் போராட்டங்களையும் கவனயீர்ப்புக்களையும் செய்து வரும் தமிழினத்தின் மீது தொடர்ந்தும் சிறிலங்கா அரசு தமது இனவழிப்பு போரை நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

பல தசாப்பதங்களாக நிகழ்ந்து வரும் சாட்சியமற்ற இனவழிப்பில் நாம் இழந்த எமது உறவுகளை இந்நாளில் நினைவில் கொள்வோம்.

Leave a comment

Trending