“இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும்”. என்று கோரி மட்டக்களப்பு அன்னையர் முன்னணியின் சார்பில் திருமதி பூபதி கணபதிப்பிள்ளை அவர்கள் அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை 1988ம் ஆண்டு மார்ச் மாதம் பத்தொன்பதாம் திகதி சனிக்கிழமை காலை 10-45 மணிக்கு மட்டக்களப்பு அமிர்தகழி சிறி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்றலில் உள்ள குருந்த மரநிழலின் கீழ் அன்னை பூபதி தனது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஏப்பிரல் 19ம் திகதி அன்னை உயிர்நீத்தார்.

தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு நாளை, நாட்டுப் பற்றாளர் நாளாக 2006ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைமை பிரகடனப்படுத்தியிருந்தது.

அவ்வகையில் எதிர்வரும் 19.04.2026 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 மணிக்கு பேர்த் மேற்கு அவுஸ்ரேலியாவில் நாட்டுப் பற்றாளர் நினைவு கூரப்படவுள்ளது.

இந்நிகழ்வில் அன்னை பூபதி அவர்கள் உட்பட தமிழின விடுதலைக்காக தங்களை ஆகுதியாக்கிய அனைத்து நாட்டுப் பற்றாளர்களையும் நினைந்து அகவணக்கம் செலுத்த அனைவரையும் பேரன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
நிர்வாகம்
தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை

Leave a comment

Trending