கடலின் மடியில் குழுமத்தின் உருவாக்கத்தில் ‘கடலில் கரைந்துவிட்ட காலங்களும் வரலாற்றில் தடம் பதித்துவிட்ட நினைவுகளும்‘ பாகம் 01 உலகளவிய ரீதியில் எதிர்வரும் 01.03.2026 அன்று வெளியீடு காண்கின்றது.
வரலாற்றில் கடந்து வந்த பதைகளை சம்பவங்களை பதிவு செய்து அவ்வரலாற்று உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சீரிய பணிகளுக்கு தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை நிர்வாகம் ஆதரவை வழங்கி வருகின்றது.
அந்த வகையில் அவுஸ்ரேலியா பேர்த் மாநகரிலும் குறித்த நாளில் இவ் வரலாற்று உருவாக்கத்தை வெளியீடு செய்வதில் தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை நிர்வாகம் பேருவகை அடைகின்றது.
இவ் நிகழ்வில் கலந்து சிறப்பித்து வரலாற்று உண்மைகளின் மாண்பை போற்றுதல் தமிழர்களாகிய எமது காலப் பணியாகும். அவ்வகையில் எதிர்வரும் 01.03.2026 அன்று இடம் பெறும் இந்நுால் வெளியீட்டில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இடம் – Hillview Intercultural Community Centre , 1 Hill View Place, Bentley WA, Australia
காலம் – 01.03.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணி
நன்றி
நிர்வாகம்
தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை








Leave a comment