ஈழப் போராட்ட வரலாற்றில் மருத்துவ போராளிகள் பற்றிய திரைப்படமான தி. கிட்டுவின் சல்லியர்கள் திரைப்படம் பேர்த் மேற்கு அவுஸ்ரேலியாவில் திரையிடப்படவுள்ளது.
தமிழின வரலாறுகளை எம் இளைஞ்சந்ததியினருக்கு கடத்தும் சிறந்த ஊடகமாக திரைத் துறை இருந்தாலும் தமிழின வரலாறு சார் திரைப்படங்கள் அரிதாகவே வெளிவருகின்றன.
எமது இனம் மொழி கலாச்சாரம் சார் கதைகளை மிகுந்த சிரமத்தின் மத்தியில் திரைப்படங்களாக வெளியிடும் திரைத்துறை சார்தோருக்கு எமது ஆதரவை தெரிவித்து அவர்களை ஊக்கப்படுத்துவது தமிழினத்தின் தலையாய கடமை.
அவ்வகையில் அண்மையில் வெளிவந்துள்ள ஈழப் போராட்ட வரலாற்றில் மருத்துவ போராளிகள் பற்றிய திரைப்படமான தி. கிட்டுவின் சல்லியர்கள் திரைப்படம் வெளிவந்து தமிழினத்தின் மத்தியிலும் தமிழின வரலாற்று படைப்பாளிகள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழினப் போராட்டத்தின் அறத்தினை சொல்லும் இப்படம் மிக விரைவில் பேர்த்தில் திரையிடப்படும் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.
எமது வரலாற்றை சொல்லும் இத்திரைப்படத்திற்கு தங்களின் பேராதரவினை தந்து இத்திரைப்படக்குழுவிற்கும் இவ்வழியே பயணிக்கும் அனைத்து துறையினருக்கும் தமிழினத்தின் ஆதரவினையும் ஊக்கத்தையும் நல்குமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
காலம் : 31/01/2026 மாலை 7:00மணிக்கு
இடம் : Indian Community Centre
12 Whyalla St Willetton WA 6155







Leave a comment