வணக்கம்,
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ள அனர்த்தம் காரணமாக பல பகுதிகளில் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. பிரதான பாதைகள் தடைப்பட்டுள்ள காரணத்தினால் இன்னமும் பல பகுதிகளில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் பெருமளவு உதவிகள் தேவைப்படலாம். அதனால் மேற்கு அவுஸ்ரேலிய இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் உறவுக்கரங்கள் திட்டத்தினுடாக உதவிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை இத்திட்டத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதுடன் பேர்த் வாழ் தமிழ் சமூகம் உறவுக்கரங்கள் திட்டத்திற்கு கீழ்வரும் வங்கி விபரம் ஊடாக தமது பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தாயகத்தில் உள்ள மக்களுக்கான வெள்ளநிவாரண உதவிகளுக்கு நன்கொடை செலுத்த விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட வாங்கிக்கணக்கிற்கு பணத்தை செலுத்துவதோடு, REF – 2025 Flood Relief Assistance என்று குறிப்பிடவும்.
Account Name – Ilankai Tamil Sangam of WA (Inc)
BSB – 086-138
Account Number – 825942705
தங்கள் ஒத்துழைப்புக்கு
நன்றி
பேரவை நிர்வாகம்.






Leave a comment