எதிர்வரும் 19/04/2022 அன்று, பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் 19-03-1988 முதல் 19-04-1988 வரையான முப்பதுநாட்கள் உண்ணா நோன்பிருந்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 34வதுஆண்டு நினைவுநாளாகும்.

அன்று தாயக விடுதலைப் போராட்டத்தில் பின்புலமாக உழைத்து சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்களையும் நினைவு கூருகின்ற நிகழ்வும் மேற்கு அவுசுரேலியாவில் இடம்பெற உள்ளது. நாட்டுப்பற்றாளர்களுக்கான இவ் வணக்க நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

காலம் : 19/04/2022 மாலை 6:30 மணி
இடம் : மடிங்ரன் சமூக நிலையம்

(Maddington Community Centre //Lesser hall // 19 Alcock St, Maddington WA 6109)

Leave a comment

Trending