26/09/2021 ஞாயிறு மாலை மடிங்ரன் சமூக மண்டபத்தில் தியாகத்தின் எல்லையை தொட்ட மாவீரன் லெப் கேணல் திலீபன் மற்றும் மாவீரன் பெருவிருட்சம் கேணல் சங்கர் அவர்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் பொதுச்சுடரினை இலங்கை தமிழ் சங்கத்தின் தலைவர் திரு ஜீவன் ஜெகநாதன் அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து அவுசுரேலிய பூர்வீக மக்களின் கொடியை தமிழ் சங்கத்தின் உப தலைவர் திரு சோமசுந்தரம் அவர்கள் ஏற்றிவைக்க அவுசுரேலிய தேசியக்கொடியை ஏதிலிகளுக்காக குரல் கொடுத்து வருபவரும் பிறிமன்டல் நகரசபை உறுப்பினருமான சாம் வெய்ன்ரைட் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தமிழீழ தேசிய கொடியை நாடுகடந்த தமிழீழ அரசின் வெளிவிவகார பிரதிநிதி திரு மாணிக்கவாசகர் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து மாவீரர்களுக்கான ஈகைச்சுடரை மணி ஆனந்தன் அவர்கள் ஏற்றியதை தொடர்ந்து தாயக விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் பொது மக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து அனைவரும் லெப் கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து சிறுவர்கள் தமது திலீபன் மாமாவுக்கான கவிதைகளையும் பேச்சுகளையும் வழங்கினர். சாம் வென்ரைட் சிறப்புரையை தொடர்ந்து செல்வி யது ரகு அவர்களின் நடனம் இடம்பெற்றது.
இம்முறை பெருமளவான மக்கள் கலந்து கொண்டதுடன் வழமையை விட அதிகளவான சிறுவர்களும் நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தனர். மாலை 8:30 மணிக்கு தேசிய கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.
முன்னர் தாயகத்தில் பன்னிருநாட்களும் திலீபனுக்காக ஒவ்வொரு வீட்டு வாயிலிலும் வைக்கப்படும் நினைவகத்தின் மாதிரி இங்கு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








































Leave a comment