மேற்கு அவுத்திரேலியாவில் கடந்த 25/07/2021 திரை காணவிருந்து தவிர்க்க முடியாத காரணத்தினால் 01/08/2021 அன்று திரையிடப்பட்டது.

அரங்கம் நிறைந்த வரவேற்பை பெற்ற மேதகு திரைக்காவியம்///

மேதகு, மோசமான காலநிலையையும் கருத்தில் கொள்ளாது மூன்று தலைமுறையினரையும் அரங்கத்தினுள் அழைத்து வந்திருந்தது.

தமது காலத்தை மீட்டிப் பார்க்கவும், எதிர்காலத்தினருக்கு வரலாற்றை சொல்லிக் கொடுப்பதற்காகவும், அறியாதவர்கள் தமிழீழ போராட்ட வரலாற்றின் ஆரம்பத்தை அறிவதற்காகவும் வந்திருந்ததாக தமது கருத்துக்களை பதிவு செய்திருந்தார்கள்.

மேதகு வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டதாகவும் முழுமையான வரலாறு அல்ல என்றும் பல முக்கிய விடயங்களை தவறவிடப்பட்டதையும் சிலர் பதிவுசெய்தனர்.

அரங்கில் இடமின்மையால் முற்கூட்டியே பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டும், திரைகாண வந்தவர்கள் தி்ருப்பி அனுப்பப்பட்டும், மட்டுப்படுத்தப்பட்ட அறிவிப்பு என்பவற்றால் நூற்றுக்கணக்கானவர்கள் இச்சந்தர்ப்பத்தை தவறவிட்டத்தற்காக மனம் வருந்தி தமது ஆதங்கங்களை தெரிவித்து வருகின்றனர்.

அவர்களிடம் ஒழுங்கமைப்பாளர்கள் மன்னிப்பு கேட்பதுடன் அவர்களுக்காக #மேதகு மீண்டும் திரைகாணும் சந்தர்ப்பம் மேற்கு அவுத்திரேலியாவில் உருவாகி உள்ளது. விரைவில் அது தொடர்பான முயற்சிகளை மேற்கொள்ளவோம் என்பதையும் தெரியப்படுத்த விரும்புகின்றோம்.
அனைவரின் ஆதரவிற்கும் நன்றிகள்🙏

Thanks to everyone who support to METHAGU.
Sorry for the inconvenience. METHAGU will see the screen again at the request of many🙏

Leave a comment

Trending