
தைப்பொங்கல் பெருவிழா அவுத்திரேலிய தமிழர் பேரவை மேற்கு அவுத்திரேலியா மற்றும் தமிழ் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை மேற்கு அவுத்திரேலியா ஒழுங்குபடுத்தலில் Rossiter Pavilion, 16 Tuberose rd, Piara Waters WA 6112 என்னும் இடத்தில் நடைபெற்றது.
30.01.2021 சனிக்கிழமை மாலை 3.40 மணிக்கு மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து அவுத்திரேலிய பூர்வீக மக்கள் கொடி, அவுத்திரேலிய தேசியக் கொடி, தமிழீழத் தேசியக் கொடி என்பன ஏற்றப்பட்டு கொடி வணக்கம், அகவணக்கம் செலுத்தப்பட்டு தமிழர் பெருவிழா நிகழ்வுகள் ஆரம்பமானது.
தொடர்ந்து சிறியோர் பெரியோருக்கான விளையாட்டுக்கள், தமிழர் கிராமிய விளையாட்டுக்கள், கலாச்சார நிகழ்வுகள், வினோத உடை போன்ற இனிமையான நிகழ்வுகளும் இடம் பெற்றன.
நிகழ்வில் பங்குபற்றியோருக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் தமிழர் பெருவிழா தொடர்பாக நடத்தப்பட்ட திருக்குறள் மனனப் போட்டிக்கான சான்றிதழ்கள் பரிசில்களும் வழங்கப்பட்டன. கேணல் கிட்டு உட்பட்ட பத்து வேங்கைகள் நினைவாக நடாத்தப்பட்ட மட்டைப்பந்து போட்டிக்கான வெற்றிக் கிண்ணங்களும் நிகழ்வின் இறுதியில் வழங்கப்பட்டு மாலை 8.30 மணிக்கு தமிழர் பெருவிழா இனிதே நிறைவடைந்தது.


















































Leave a comment