தமிழின அழிப்பின் உச்சக்கட்டமாக 2009 மே மாத இறுதியில் சிறிலங்கா அரசினால் நடாத்தப்பட்ட மாபெரும் மனிதப் பேரவலமான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பை, தமிழின வரலாற்றில் சிறிலங்கா அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்புகளின் பொது நினைவேந்தல் அடையாளமாக தமிழினம் தாயகத்திலும், புலத்திலுமாக தமிழர் பரந்து வாழும் அனைத்து தேசங்களிலும் ஆண்டுதோறும் மே 18 அன்று கடைப்பிடித்து வருகின்றது.
அவ்வகையில் எதிர்வரும் 18.05.2026 திங்கட் கிழமை மாலை 6.00 மணிக்கு பேர்த் மேற்கு அவுஸ்ரேலியாவில் தமிழின அழிப்பு நாள் நடைபெறவுள்ளது.
தமிழின வரலாற்றில் சிறிலங்கா அரசின் பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட மக்களையும் குறிப்பாக இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்காக படுகொலை செய்யப்பட்ட உறவுகளையும் நினைந்துருகி அவர்களுக்கான நீதிவேண்டிய உறுதியேற்பில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
காலம் – 18.06.2026 திங்கட் கிழமை மாலை 6.00 மணி
இடம் – Maddington Community Ctr 19, Alcock St Maddington, WA 6109
நிர்வாகம்
தமிழத் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை
மேற்கு அவுஸ்ரேலியா






Leave a comment