பாலன் பிறப்பையும் சமூக மேம்பாட்டையும் உணர்த்தும் ஒளிவிழா 20/12/2025 சனிக்கிழமை மாலை (Linwood Wandarrah Hall) லின்வூட் மேற்கு அவுஸ்ரேலியாவில் சிறப்புற நடைபெற்றது.

யேசு கிறிஸ்துவின் பிறப்பை போற்றும் பாடல்கள் நடனங்கள் மற்றும் பேச்சுகள் போன்ற நிகழ்வுகளுடன் மதிப்புக்குரிய தேவாயல முதல்வர்களின் ஆசி உரையும் பிரார்த்தனையும் இடம்பெற்றது

நிகழ்வின் இறுதியில் நத்தார் பாப்பா அரங்கில் தோன்றி பரிசுப் பொருட்களையும் இனிப்புகளையும் வழங்கி சிறுவர்களை மகிழ்ச்சிப் படுத்தினார். நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிற்றுணவும் இரவு உணவும் வழங்கப்பட்டு ஒளிவிழா நிகழ்வுகள் அனைத்தும் மாலை 8:00 மணியளவில் நிறைவுக்கு வந்தன.

தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை மற்றும் பத்மா பராமரிப்பு சேவை ஆதரவுடன் ஒளிவிழா 2025 நிகழ்வுகள் நடைபெற்றன. ஒளிவிழா நிகழ்வுகள் அனைத்தையும் சஞ்சிவ்குமார் சகாயநேசன் சிறப்புற ஒழுங்கமைத்திருந்தார்.

Leave a comment

Trending