உணர்வுகளை மதித்து ஒற்றுமையுடன் வீரவணக்கம் செலுத்த வேண்டுகோள்: தமிழீழ விடுதலைப் போரில் தமது இன்னுயிரை ஈகம் செய்த உயரிய தேசப் புதல்வர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னிட்டு, மேற்கு அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழ் உறவுகளுக்கு தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை விடுக்கின்ற அன்பான வேண்டுகோள் இது.

வரலாற்றைப் பேணிப் பாதுகாக்கும் உயரிய நோக்குடன் செயற்படும் எமது பேரவையானது, எதிர்வரும் நவம்பர் 27, 2025 அன்று நடைபெறும் மாவீரர் நாள் நினைவெழுச்சி நிகழ்வுகளில், மக்கள் அனைவரும் அழுத்தங்கள் இன்றிப் பங்கேற்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறது.

அண்மையில், மேற்கு அவுஸ்ரேலிய தமிழ் அமைப்புகளுடன் நாம் நடத்திய சந்திப்பின் அடிப்படையில், அனைவரின் உணர்வுகளுக்கும் மரியாதை அளித்து, ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தைப் பேரவை வலியுறுத்த விரும்புகிறது.

எமது அன்புரிமையான வேண்டுகோள்: தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து வெவ்வேறு மனநிலைகளில் உள்ள அனைவரின் உணர்வுகளையும் பேரவை மதிக்கிறது. எனவே, அன்பான உறவுகள் அனைவரும், எவ்வித தயக்கமோ, குழப்பமோ இன்றி, தங்களுக்கு மனநிறைவையும் ஆறுதலையும் அளிக்கும் இடத்தில் நடைபெறும் மாவீரர்நாள் நிகழ்வில் கலந்துகொண்டு, தாயக விடுதலைக்காக வித்தாகிப்போன எமது மாவீரச் செல்வங்களுக்கு உங்கள் வீர வணக்கத்தைச் செலுத்துமாறு தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை பணிவுடன் கேட்டுக்கொள்கிறது.

நன்றி,

நிர்வாகம்

தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை

Leave a comment

Trending