தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை முன்னிறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் 2001ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘பொங்குதமிழ்’ நிகழ்வானது தாயகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று தமிழர்களின் அபிலாசைகளை உலகிற்கு உணர்த்தி நின்றது. அதன் தொடர்ச்சியாக அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அவுஸ்ரேலிய பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன்
பொங்குதமிழ் மக்கள் எழுச்சி நிகழ்வு நடைபெறவுள்ளது.

தமிழ் மக்களின் அபிலாசைகளை கருத்தில் கொள்ளாது 1948ம் ஆண்டு இலங்கையின் ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களின் இறைமையை பிரித்தானிய அரச அதிகாரம் கையளித்தது. அவ் இறைமையை பெற்றுத்தரக் கோரி பிரித்தானிய அரசாங்கம் மற்றும் சர்வதேச நாடுகளின் கண்காணிப்பின் கீழ் தனித்தேச அங்கீகாரத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரி இந்த பொங்குதமிழ் எழுச்சியை அவுஸ்ரேலிய பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளையோர் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

09.11.2025 காலை 09.00 மணி முதல் 12.00 மணிவரை நடைபெறும் இவ் எழுச்சி நிகழ்விற்கு அவுஸ்ரேலிய மெல்பேர்ன் நகரில் வசிக்கும் அனைத்து தமிழர்களும் ஒன்று திரண்டு பேரெழுச்சியாக கலந்து கொண்டு தமது வரலாற்றுக் கடமையை ஆற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மெல்பேர்னில் நடைபெறும் இவ்வரலாற்று நிகழ்வு எதிர்வரும் காலங்களில் அவுஸ்ரேலியா வின் பிற மாநிலங்களிலும் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெறுவதற்கு முத்தாய்ப்பாய் அமைவதுடன் பேரழுச்சி கொண்டு இவ் உலகிற்கு தமிழினத்தின் அபிலாசைகளை ஓங்கி ஒலிக்கட்டும்.
நன்றி
நிர்வாகம்
தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை
மேற்கு அவுஸ்ரேலியா

Leave a comment

Trending