தியாகதீபம் லெப் கேணல் திலீபன் 38வது ஆண்டு மற்றும் கேணல் சங்கர் 24வது ஆண்டு நினைவெழுச்சி் நாள் பேர்த் மேற்கு அவுஸ்ரேலியாவில் சிறப்பாக இடம்பெற்றது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நிறைவேற்ற தனது 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து தியாக தீபம் லெப் கேணல் திலீபன் நீராகாரம் இன்றி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் 26/09/1987 அன்று வீரச்சாவை தழுவினார். உலகில் ஒப்பற்ற தியாகச் செம்மலின் 38வது ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

தமி ழீழ வான்படையின் முதன்மைத் தளபதியாக விளங்கிய கேணல் சங்கர் சிங்கள பேரினவாதத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் தாக்குதலில் 26/09/2001 அன்று வீரச்சாவை தழுவிக்கொண்டார் அவரது 25வது ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

இந்நினைவுகளை தாங்கிய எழுச்சிநாள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. மாலை 6:05 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு ஈகைச்சுடர் ஏற்றல் அகவணக்கம் மலர்வணக்கம் என்பவற்றுடன் நினைவுரை, பாடல் மற்றும் கவிதை என இம்மாவீரர்களை போற்றும் சிறப்பம்சங்களுடன் இனிதே நிறைவடைந்தது.

Leave a comment

Trending