தமிழின வரலாற்றில் ஒப்பாரும் மிக்காரும் அற்ற தலைவனாய் தமிழினம் தலைநிமிர, எதிரிகள் அகலக்கால் பதித்த தமிழீழக் களம் எங்கும் போரியல் சாதனைகள் புரிந்து, தமிழீழ தனியரசை நிறுவி, தன் மக்களுக்காய் கொண்ட இலட்சியத்தில் எவ்வித சமரசங்களுக்கும் இடம் கொடாமல் உலக வல்லாதிக்கத்தின் துணை கொண்டு சிறிலங்கா படைகள் நடத்திய இனவழிப்பு போருக்கு எதிராக தமிழீழ முப்படை நடத்தி இறுதிவரை போரிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் 2009  ஆம் ஆண்டு மே மாதம் 18 ம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பதினாறு வருடங்களின் பின்னர் 10.03.2025 அன்று தமிழீழ மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு அறிவித்தலை ஏற்று தாயகத்தில் நடைபெற்று வந்த வீரவணக்க நிகழ்விற்கு ஒப்ப மிக நேர்த்தியான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு 02.08.2025 அன்று மேற்கு அவுஸ்ரேலியாவில் தமிழீழத் தேசியத்தலைவருக்கான வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

நடைபெற்ற வீரவணக்க நிகழ்வின் காணொளி வடிவம்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு-மேற்கு அவுஸ்ரேலியா

Leave a comment

Trending