தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை எதிர்வரும் 02.08.2025 அன்று தமிழீழத் தேசியத் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வை செய்வதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழீழத் தேசியத் தலைவர் கொள்கைவழி நின்று தன் இனத்திற்கு தெளிவான வரலாற்றை விட்டுச் சென்று இரண்டு தசாப்தங்களை நெருங்கின்றது.
காலம் தன் கடமையை செய்யும் என்பது யதார்த்தம். அவர்காலத்தில் வாழ்ந்த மக்கள், அவரோடு வாழ்ந்த மக்கள், அவர் கொள்கையை ஏற்று வழிநடந்தோர் மற்றும் ஆதரவளித்தோர் என அனைவரும் வாழும் வாழ்ந்துகொண்டிருக்கும் இக்காலத்தை தவறவிடாது நாம் அவருக்கான கடமையை செய்து போற்றுவதே சாலச்சிறந்தது.
தமிழினம் தம் தலைமுறைக்கு தெளிவான வரலாற்றை கடத்த வேண்டியதே இக்கால யதார்த்தம். தமிழீழ தேசியத் தலைவரை தம் உயிரினும் மேலாக நினைத்தவர்கள் தமிழர்கள் எனவே அவர் இல்லாமையை ஏற்பது என்பதின் கனதி உலகறிந்தது. பேரிழப்புக்களையும் பெருந்துன்பங்களையும் கடந்து வந்த இனம் இக் கனத்த செய்தியையும் மனதார ஏற்று அவருக்கான நினைவு வணக்கத்தை செலுத்துவதே கடமை.
தமிழினத்திற்காக தமிழின விடுதலைக்காக இறுதி வரை களத்தில் நின்றது மட்டுமன்றி எதிர்கால சந்ததிகளுக்காக தெளிவான வரலாற்றையும் விட்டுச் சென்றவர் எம் தலைவர். அம் மாவீரனின் தியாகத்திற்கு ஏதுவும் ஈடு ஆகாது. மாவீரரின் தியாகங்களை போற்றும் பண்பாடு தலைவரால் உருவாக்கப்பட்டது உலக தமிழர்களால் போற்றப்படுவது.
அப்பண்பாட்டின் யதார்த்தத்தை ஏற்று அம்மாசற்ற மறவனுக்காக தமிழினம் தனது கடமையை செய்வது தான் அவர் உருவாக்கிய வரலாற்று பண்பாட்டின் பணி.
தமி ழீழ தேசிய தலைவர் என்ற மாபெரும் தமிழின அடையாளத்தின் இல்லாமை வீரச்சாவு என்பதுடன் முற்றுப்பெற்று விடாது. பல யுகங்கள் தாண்டியும் தமிழினத்தை வழிநடத்தும் ஆற்றல் கொண்ட பெருவீரன் எம் தலைவர்.
அவரின் முடிவை ஏற்காமல் ஏங்கும் தமிழினம் தம் மனங்களை யதார்த்தமான சூழ்நிலைக்குள் கொண்டுவந்து அவருக்கான வீரவணக்க நிகழ்வில் கலந்து தமது மரியாதையை செலுத்துவதே அம்மாவீரனின் மாண்பிற்கு் பெருமை.
தமிழினத்தின் தன்னிகரில்லாத் தலைவர் மேதகு வே பிர பா கரன் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு பேர்த் மேற்கு அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 02.08.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ள வீரவணக்க நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு தங்களது வணக்கத்தை அம் மாசற்ற மறவனுக்கு செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிர்வாகம்
தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை
மேற்கு அவுஸ்ரேலியா






Leave a comment