தமிழின வரலாற்றில் ஒப்பாரும் மிக்காரும் அற்ற தலைவனாய் தமிழினம் தலைநிமிர, எதிரிகள் அகலக்கால் பதித்த தமிழீழக் களம் எங்கும் போரியல் சாதனைகள் புரிந்து, தமிழீழ தனியரசை நிறுவி, தன் மக்களுக்காய் கொண்ட இலட்சியத்தில் எவ்வித சமரசங்களுக்கும் இடம் கொடாமல் இறுதிவரை போரிட்டு வீர வரலாறாகிய தமிழீழத் தேசியத் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வு தமிழர் பரந்துவாழும் தேசமெங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் எதிர்வரும் 02.08.2025 அன்று பேர்த் மேற்கு அவுஸ்ரேலியாவில் நடைபெறும் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு தமிழீழத் தேசியத் தலைவருக்கு வீரவணக்கத்தை செலுத்தி அம் மாசற்ற மறவனின் மாண்பை போற்றுவோம்.





Leave a comment