அன்னை பூபதியின் 37ம் ஆண்டு வணக்க நிகழ்வும் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நிகழ்வும் 19-04-2025 சனிக்கிழமை அன்று பேர்த்தில் நடைபெற்றது. Gosnells RSL Hallல் நடைபெற்ற இந்நிகழ்வு மாலை 6 மணிக்கு ஆரம்பமானது.
நிகழ்வில் அன்னைபூபதி மற்றும் தமிழீழ நாட்டுப்பற்றாளர் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரை தேசிய செயற்பாட்டாளர் திரு ஆனந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, தாயக விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உறுதுணையாக நின்று பங்களித்த நாட்டுப்பற்றாளர்களையும் போராட்டத்தின் பால் உயிர் நீத்த அனைத்து பொதுமக்களையும் நினைவில் சுமந்தும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நிகழ்விற்கு வருகைதந்த அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர். தமிழீழ நாட்டுப் பற்றாளர் நாள் சிறப்புரையை திரு. வித்தியாகரன் அவர்கள் வழங்கியதை தொடர்ந்து சமகால கருத்தரங்கு இடம்பெற்று மாலை 7.30 மணியளவில் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுக்கு வந்தது. இன்றை நிகழ்ச்சிகளை திரு. விமலாதித்தன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.






















Leave a comment