தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 யூலை 5ம் நாள் சிறிலங்கா பேரினவாத அரசுக்கும், அதன் இராணுவத்திற்கும் எதிராக, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவ முகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும்.
எம்மை விழுங்கக் காத்திருந்த விசப் பூதங்களை எல்லாம் அகற்றி எமது விடுதலைப் பாதையினைச் செப்பனிட்டுத் தந்தவர்களுக்கான நாள் இந்நாள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அன்று தொட்டு பல தற்கொடைத் தாக்குதல்களை எமது வீர மறவர்கள் தமிழீழ மக்களின் தாயக விடுதலைக்காக நிகழ்த்தியுள்ளார்கள்.
பல ஆண்டுகளாக எதிரியின் மத்தியில் உலவி, தேசிய விடுதலையை மட்டுமே தமது தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராமல், தமது பாதையில் எத்தடை வரினும் அதை உடைத்தெறிந்து தமது கடமையை செய்த நெருப்பு மனிதர்கள்.
எத்தனையோ கரும்புலிகள் தமது முகத்தையோ, முகவரியையோ, காட்டாமல், தமக்கென சுயநல பெருமை தேடாமல் தமிழ்த் தேசத்தின் இருப்பை நிலை நாட்ட இரும்பு மனிதர்கள் அடையாளம் மறைத்து தமிழீழ விடுதலைக்கு தமது அர்ப்பணிப்பாலும் செயலாலும் தம்மை உரமாக்கி தமிழினத்தின் வரலாற்றில் தம்மை அழியாத அடையாளமாய் இட்டுச் சென்றுள்ளார்கள். 37 ஆண்டுகளுக்கு முன்னர் 05/07/1987 அன்று யாழ்ப்பாணம் வடமராச்சியில் உள்ள நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா படைத்தளம் மீது கப்டன் மில்லரினால் நடாத்தப்பட்ட தாக்கதலுடன் கரும்புலிகளின் சகாப்தம் ஆரம்பமாகிறது.
தரை கடல் மட்டுமல்லாது வானிலும் ஏறி சாதனைகளை தமதாக்கியவர்கள் கரும்புலிகள். எதிரியின் படைபலத்தை தமது மனபலத்தால் உடைத்தெறிந்து தமிழின விடுதலைக்கு வித்தான கரும்புலி மாவீரர்களை பூசிக்கும் நினைவேந்தல் நிகழ்வு 05/07/2024 அன்று பேர்த்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.























Leave a comment