மூத்த தளபதி கேணல் கிட்டு உள்ளிட்ட வங்கக்கடலில் காவியமான பத்து வேங்கைகளின் நினைவாக ஆண்டு தோறும் நடாத்தப்படும் விளையாட்டுக்கள் இம்முறை 21.01.2024 அன்று பேர்த்தில் விளையாட்டுக்கள் நடைபெற்றன.
தாயகம் நேக்கிய பயணத்தின் போது 16.01.1993 அன்று வங்கக் கடற்பரப்பில் வைத்து இந்திய சதிவலைக்குள் சிக்காமல் தாம் பயணித்த படகுடன் தம்மை தீ மூட்டி வீரச்சாவை தழுவிய கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் முப்பத்தி ஒராவது ஆண்டு நிறைவு நாள் 16.01.2024 ஆகும். தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை மற்றும் அவுஸ்ரேலிய தமிழர் பேரவையும் இணைந்து ஆண்டு தோறும் வங்கக்கடல் வேங்கைகளின் நினைவாக மேற்கு அவுஸ்ரேலியாவில் நடாத்தப்படும் விளையாட்டு 21.01.2024 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
காலை 9.00மணிக்கு மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டோரால் திருவுருவப்படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து மூத்த தளபதி கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவை தழுவிய மாவீரர்களின் நினைவுரையுடன் விளையாட்டுக்கள் ஆரம்பமாகின. துடுப்பாட்டம், கால்பந்து மற்றும் கரப்பந்து போட்டிகள் வங்கக்கடலில் காவியமான மாவீரர்களின் பெயர் தாங்கிய அணிகளுக்கிடையே இடம்பெற்று மாலை 6.00 மணிக்கு விளையாட்டுக்கள் நிறைவுக்கு வந்தன.
















Leave a comment