10/10/1987 அன்று வீரச்சாவடைந்த தமிழீழத்தின் முதற் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட நான்கு மாவீரர்களின் 36வது ஆண்டு வணக்க நிகழ்வும் தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும் 14/10/2023 அன்று பேர்த்தில் சிறப்புற நடைபெற்றது.

நிகழ்வில் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கான ஈகைச்சுடரினை திருமதி ரூபனா யோகேஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தாயக விடுதலைப்போரில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கும் அதன்பால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.

மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கான மலர்மாலையை திருமதி. மெனிஸ்ரெலா விமலாதித்தன் அணிவித்து வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் திருவுருவப்படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினர்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் பெண்களின் பங்கு அளப்பரியது. முதற் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி அவர்களின் வீரம் செறிந்த வரலாற்றை திருமதி ரூபனா யோகேஸ்வரன் வழங்கிச்சென்றார். தொடர்ந்து திருமதி ஜனனி சிவமைந்தன் தமிழீழ பெண்களின் எழுச்சியும் தற்போதைய அதன் தேவையும் எனும் கருப்பொருளில் சிறப்புரையாற்றினார்.

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை, என்றுமே தியாக மனப்பான்மையுடன் வாழ்ந்து சாதனைகள் பலற்றுக்கு சொந்தக்காரரான தமிழீழ பெண்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது, உரிமைகளை இழந்து இருக்கும் எமக்கு அவசியமானது என்று கூறி தமிழீழ பெண்கள் எழுச்சிநாள் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கிய திருமதி சுபாகினி அருட்செல்வம் நிகழ்ச்சிகளை நிறைசெய்தார்.

Leave a comment

Trending