இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட பாரிய தமிழர் இனவழிப்பின் சாட்சியமாக 1983 யூலையில் நடாத்தப்பட்ட படுகொலைகள் இருக்கின்றன. இப்பெரு இனவழிப்பு நடைபெற்று, இன்று 40 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அன்று நடைபெற்ற அவலத்தின் வலி இன்னமும் மறையவில்லை. எரித்தும் கத்தியால் வெட்டப்பட்டும் வீதி வீதியாக இறந்த உறவுகளும், சிறைச்சாலைக்குள்ளே கொடூரமாக கொல்லப்பட்ட அரசியல் கைதிகளும், கொழும்பில் வாழ்ந்த தமிழர்களை கப்பலில் ஏற்றி தமிழர் தாயகத்திற்கு விரட்டப்பட்ட நிர்க்கதி நிலையும், தமிழர் சொத்துக்களை சூறையாடியும் அழித்தும் தமிழர் பொருளாதாரத்தை நிர்முலமாக்கிய அவல நிலையும் இன்னும் மறந்துவிடவில்லை.
இவ்வலிமிகுநாளின் நினைவுகளை சுமந்து இழக்கப்பட்ட உறவுகளை நெஞ்சங்களில் ஏந்தி எதிர்வரும் சனிக்கிழமை 29/07/2023 மாலை இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
29.07.2023
Saturday
5.00pm – 6.30pm
Thornlie Park Centre
50-60 Thornlie Ave
Thornlie 6108





Leave a comment