தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை மற்றும் அவுஸ்ரேலிய தமிழர் பேரவை இணைந்தும் மற்றும் மேற்கு அவுஸ்ரேலிய தமிழ் அமைப்புகளின் ஆதரவுடனும் தமிழர் பெருவிழா தைப்பொங்கல் நிகழ்ச்சி 28/01/2023 அன்று நடைபெற்றது.
28/01/2023 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு Rossiter Pavilion, 16 Tuberose rd, Piara Waters WA 6112 வில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. நிகழ்ச்சிக்கு வருகைதந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மங்கல விளக்கினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
தொடர்ந்து தேசியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. அவுஸ்ரேலிய தேசியக் கொடியினை, திரு. றமணன் கனகரத்தினம் அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து அவுஸ்ரேலிய பூர்வகுடி மக்களின் கொடியினை திருமதி தர்சினி பிரதீபன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடியினை திருமதி கிருசாந்தி கரன் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழ மண்மீட்பு போரில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கும் மக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தமிழ்மொழி வாழ்த்து பாடப்பட்டதை தொடர்ந்து திருமதி. கலைமதி தனா மற்றும் திருமதி சுபாசினி சிவசக்தி தலைமையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி ஆரம்பமானது. அதனை தொடர்ந்து திருமதி துசிதா சாந்தரூபன் அவர்களின் நெறியாள்கையில் சிறுமிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.
தமிழ்த்தேசிய கலை பண்பாட்டுப் பேரவையினால் வருடந்தோறும் வழங்கப்படும் “செயல்மாந்தர்” விருது இவ்வருடம் தெற்கு தமிழ்ப்பள்ளியை ஆரம்பித்தவர்களின் ஒருவரும் சிறந்த சமூக சேவையாளருமான மதிப்புக்குரிய முனைவர் அருண் ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. திரு வைகுந்தவாசன் அவர்களால் செயல்மாந்தர் அருண் ராதா கிருஷ்ணன் பற்றிய குறிப்புரை நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவையின் தலைவர் திரு விமலாதித்தன் நடராஜா அவர்கள் பொன்னாடை போர்த்த, பேர்த் தமிழ் மட்டைப்பந்தாட்ட கழகத்தின் தலைவர் திரு. ராஜன் வடிவேல் அவர்களினால் “செயல்மாந்தர்” விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து பரீட்சையில் பங்குகொண்ட மாணவர்களுக்கான “சிறப்பாற்றுகை” ஊக்குவிப்பு விருது வழங்கப்பட்டது. இவ்விருதினைப் பெற செல்வன் சிறிராம் நரேந்திரன், செல்வன் கவின்ராஜ் புனிதகாந்தன் மற்றும் செல்வி எழில்மதி பிரதீப்குமார் என்போர் அழைப்பட்டிருந்தனர். விருதினை செயல்மாந்தர் அருண் ராதா கிருஷ்ணன் அவர்கள் வழங்கி வைத்தார்.
தொடர்ந்து சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டுக்கள் இடம்பெற்றன. திருமதி கலைமதி தனா அவர்களின் நெறியாள்கையில் சிறுவர் சிறுமிகள் பங்குகொண்ட உடற்பயிற்சி சிறப்பாக இருந்தது. இளையோர் பெரியோர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுக்களில் கிளித்தட்டு, கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், சங்கீதக்கதிரை முதலிய விளையாட்டுக்களும் இடம்பெற்றன.
மாலை 7:30 மணியளவில் விளையாட்டுக்களில் வெற்றியீட்டியோருக்கான பரிசளிப்பு மற்றும் நடந்து முடிந்த கேணல் கிட்டு வெற்றிக்கிண்ண போட்டிகளில் வென்ற அணிகள் மற்றும் சிறப்பாட்ட வீரர்களுக்கான கேடையங்களும் வழங்கப்பட்டதை தொடர்ந்து தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்சிகள் யாவும் நிறைவுக்கு வந்தன.
பழம் பொறுக்குதல் விளையாட்டை திரு திருமதி வளர்மதி ரவி அவர்களும் சாக்கோட்டத்தை திருமதி துசிதா சாந்தரூபன் அவர்களும் தேசிக்காய் கரண்டி திருமதி தர்சினி பிரதீபன் அவர்களும் பாலூன் ஊதி உடைத்தலை திருமதி கார்த்திகா ஜெயகாந்தன் அவர்களும் தண்ணீர் நிரப்புதல் சுகந்தா சிறிபிரபாகரன் அவர்களும் குறுந்தூர ஓட்டம் திருமதி நிவே அவர்களும் மாஊதி இனிப்பு எடுத்தல் திரு சபானந்தன் அவர்களும் முட்டி உடைத்தல் திரு அமுதன் அவர்களும் கிளித்தட்டு செல்வி நிதுசிகா செல்வி ரேகா சங்கீதக் கதிரை திருமதி வதனா கயிறு இழுத்தல் திரு லோகேஸ்வரன் மற்றும் சங்கீதக்கதிரை திருமதி கிறேசி தலைமையேற்று நடத்தினர். செல்வி யதுர்சிகா ரகுநாதன் தமிழர் பெருவிழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
தமிழர் பெருவிழா தைப்பெங்கல் நிகழ்ச்சிக்கான பிரதான அனுசரணையை MKS Foods மற்றும் இணை அனுசரணையை Kenwick Auto Repair, Yaal Cafe, MPY Auto Care, Ayyappan Jewellers, Propertynet Real Estate, New Divine Hair & Beauty, Taxellent Accountants, Kulfilicious Traditional Indian Ice Cream, NR Hair & Beauty Saloon, A-Infinity மற்றும் EN ExyNet வழங்கியிருந்தனர்.


















































































































Leave a comment