வருடந்தோறும் தமிழர் பெருவிழா தைத்திருநாளை முன்னிட்டு மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கோடு தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை மற்றும் அவுஸ்ரேலிய தமிழர் பேரவை இணைந்து மாணவர்களுக்கான திருக்குறள் மனனப் போட்டியை நடாத்தி வருகின்றன.

அவ்வகையில் 2023 ஆண்டுக்கான திருக்குறள் மனனப் போட்டி 14/01/2023 அன்று பேர்த்தில் Hillview Intercultural Community Centre மண்டபத்தில் சிறப்பு நடைபெற்றது.
மாலை மணி 3:15க்கு பேர்த் தமிழ் மூத்தவர்கள் சங்கத்தின் தலைவர் திரு அமீர் அலி, கலாநிதி தணிகாசலம்பிள்ளை மற்றும் இலங்கை தமிழ் சங்க உப தலைவர் திரு சோமசுந்தரம் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தனர்.
தொடர்ந்து திரு அமீர் அலி அவர்களின் திருக்குறளின் பெருமைகூறும் சிறப்புரை இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து சிறுவர்களுக்கான திருக்குறள் மனனப் போட்டிகள் ஆரம்பமாகின. போட்டியில் அதிகீழ் பிரிவு, கீழ்பிரிவு, மத்திய பிரிவு, மற்றும் மேல் பிரிவு என்னும் பிரிவுகளில் முப்பது வரையான போட்டியாளர்கள் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியின் நடுவர்களாக கலாநிதி தணிகாசலம்பிள்ளை, திருமதி பூர்ணிமா மயூரதன் மற்றும் திருமதி மேனகா கிருபாசுதன் ஆகியோர் செயற்பட்டனர்.
போட்டியின் முடிவில் போட்டியாளர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டு மாலை 6.00மணிக்கு நிகழ்ச்சிகள் இனிதே நிறைவடைந்தன.















































































Leave a comment