தமிழீழ பெண்கள் எழுச்சிநாளை முன்னிட்டு இந்திய ஆக்கிரமிப்பு படைக்கு எதிரான தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப்போரின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி வெற்றிக்கிண்ண போட்டிகள் நடைபெற்றன.

15/10/2022 அன்று காலை 8:00மணக்கு 2ம் லெப் மாலதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து மலர்வணக்கம் இடம் பெற்றது. 2ம் லெப் மாலதி அவர்களை பற்றிய நினைவுரையை தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. போட்டியில் மட்டைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டம் ஆகியன இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டிகள் மாலை 6:00 மணியளவில் நிறைவுக்கு வந்தன. போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கான 2ம் லெப் மாலதி வெற்றிக்கிண்ணங்களும் சிறப்பாட்ட வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டன.

Leave a comment

Trending