இன்று காலை மேற்கு அவுஸ்ரேலியா பேர்த்தில்
பேராசிரியர் திரு. ராஜேஸ்வரன் தனபாலசிங்கம் அவர்கள் மறைந்த செய்தியை மிகுந்த வருத்ததுடனும் வேதனையுடனும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவுஸ்ரேலிய தமிழர் பேரவையின் (ATC) நிறுவனர்,
நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழர்களுக்கும் பெரும் பங்காற்றியவர், தமிழீழ பொருளாதார ஆலோசனை இல்லம் (TECH) அவுஸ்ரேலியாவில் நிறுவுவதில் முக்கிய பங்காற்றியவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு நிதி ரீதியாக பாரிய பங்களிப்பை வழங்கியதுடன் சிறந்த பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியவர்.
இட்டு நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்ற இந்த மாபெரும் ஆன்மாவிற்கு எங்களின் மரியாதையையும் வணக்கத்தையும் செலுத்துகிறோம்.







Leave a comment