இந்திய வல்லாதிக்கத்தை எதிர்த்து ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தமிழீழ மக்களின் உரிமைக்காக நீராகாரம் இன்றி பன்னிருநாள் பசித்தீயில் தன்னை ஆகுதியாக்கி அகிம்சையின் உச்சம் தொட்ட லெப்.கேணல் திலீபன் அவர்களின் தியாகம் நிகழ்ந்து 35 ஆண்டுகள் ஆகின்றன.

26/09/1987 அன்று தனது மண்ணுக்காகவும் மக்களுக்காவும் உயிர்நீத்த தியாகதீபத்தின் நினைவுநாள் பேர்த்தில் நடைபெறவுள்ளது.

தமிழீழ வரலாற்றில் மைல் கல்லாக விளங்கும், உலகத்திற்கு அகிம்சையை போதித்த உத்தமனின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இடம்: Thornlie Park Centre (Lesser Hall)
50-60 Thornlie Ave Thornlie 6108

காலம்: 26/09/2022
திங்கட்கிழமை மாலை 6.00 மணி

தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை
மேற்கு அவுஸ்ரேலியா

Leave a comment

Trending