மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அரசறிவியல் கல்விக்கூடத்தின் ஏற்பாட்டில், இணையம் ஊடாக நடாத்தப்பட்ட தமிழ் இளையோருக்கான முதலாவது கற்கைநெறியில் பங்குகொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று 28-08-2022 துங்காபி சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நியுசவுத்வேல்ஸ் மாநிலத்தில் இருந்து பங்குபற்றிய இளையோர்களும் செயற்பாட்டாளர்களும் பங்குகொண்ட இந்நிகழ்வில், கற்கைநெறி தொடர்பான கருத்துக்களை மாணவர்களும் பெற்றோர்களும் செயற்பாட்டாளர்களும் முன்வைத்தனர்.

தமிழர் வரலாறு, பூர்வகுடிகள் வரலாறு, அவுஸ்திரேலிய வரலாறு, உலக அரசியல் நடப்புகள் உட்பட பொருத்தமான பல விடயங்களை உள்ளடக்கி நடைபெற்ற இக்கற்கைநெறியில், 13 மாணவர்கள் முதலாவது கற்கைநெறியை நிறைவுசெய்திருந்தனர். இக்கற்கைநெறியை நிறைவுசெய்த ஏனைய மாநில மாணவர்களுக்கான சான்றிதழ்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இரண்டாவது தொகுதி மாணவர்களுக்கான கற்கைநெறி எதிர்வரும் 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதில் அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து வாழ் இளையோர்கள் பங்குகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Trending