19/04/2022 தியாகத் தாய் அன்னை பூபதி அவர்களின் 34வது ஆண்டு நினைவுநாளில் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் நினைவு வணக்க நிகழ்வு மடிங்ரன் சமூக நிலையத்தில் 19/04/2022 அன்று மாலை 6:30மணிக்கு சிறப்புற நடைபெற்றது.

நிகழ்வில் ஈகைச்சுடரினை திரு விமல் அவர்கள் ஏற்றியதை தொடர்ந்து அகவணக்கமும் மலர்வணக்கமும் இடம்பெற்றன. நிகழ்வில் தியாகத்தாய் அன்னை பூபதி மற்றும் தமிழீழ நாட்டுப்பற்றாளர்களின் நினைவுகள் தாங்கிய சிறப்பு உரையினை செல்வி சிவானியரசி கார்த்தி அவர்கள் வழங்கினார்கள்.

நிகழ்வினை திரு வாசன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

சிறப்புரை : சிவானியரசி கார்த்தி

எங்கள் மொழியையும், எங்கள் நாட்டின் பெயரையும் எங்கள் பெயரோடு சேர்த்து பெயரிட்டு வாழ்பவர்கள் நாங்கள். ஆகவே நாங்கள் தமிழர்கள்

அகர முதல எழுத்தெல்லாம் தமிழின தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்
முதற்றே உலகு!

தான் பிறந்த மண்ணின் விடுதலைக்கு முப்பது நாட்கள் உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்த தமிழ் பெரும்பாட்டி அன்னை பூபதி அவர்களை வணங்கி நாட்டுபற்றாளர் தினத்தில் எனது கடமையை செய்யகிறேன்.

தமிழர் இன வரலாற்றில்  ஆண்களும் பெண்களும் தமிழ் மொழிக்கும் இனஉரிமைக்கும், தங்கள் மண்ணுக்கும் தங்களை தியாகம் செய்த வரலாறு மிக நெடிய வரலாறு.

பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை என்கிற சொல்லிற்கு விடையளித்திட்ட வீரத்தமிழ் பெண்கள் சிலரை பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன் .—–

வீரப்பெரும்ப்பாட்டி
வேலுநாச்சியார் 7 ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயருடன் யுத்தம் நடத்தி இழந்த சிவகங்கை மண்ணை மீட்டெடுத்த வீர வரலாறு தமிழ் மண்ணுக்கு உண்டு.

முதன் முதலில் எனக்கு விடுதலை உணர்வை ஊட்டி சத்தியாகிரக சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்த வீரத்தமிழச்சி, என்று காந்தியால் வரலாற்றில் எழுதப்பட்ட  வீரப்பெரும் பாட்டி தில்லையாடி வள்ளியம்மை வரலாறும் எமது தமிழ் மண்ணுக்கு உண்டு.

பாரதி கண்ட புதுமை பெண் இல்லை,
ஈழ மண் கண்ட புரட்சி பெண்
கரும்புலி கேப்டன் அங்கையர்கண்ணி அவர்கள்.

 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, துறைமுகத்தில் தரித்து நின்ற இலங்கை இராணுவ  கப்பலை 38 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீந்தி சென்று அறநூறு டன் எடை கொண்ட கப்பலை தனி ஒரு ஆளாக தகர்த்த வீரத்தமிழ் கரும்புலி கேப்டன் அங்கையர்கண்ணி அத்தையின் வரலாரும் தமிழ் மண்ணில் உன்டு.

எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்கிறோம். அரசும் போலீசும் நமக்கு பாதுகாப்பு தருகிறோம் என்று வேடிக்கை பார்க்குதே தவிர, நமது கோரிக்கைகளை புரிந்துகொள்வதில்லை ஏற்றுகொள்வதும் இல்லை , நிறைவேற்றுவதும் இல்லை இது தெரிந்தும்  நாம் ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப வெவ்வேறு கோரிக்கைகளுக்காக ஒரே மாதிரி  போராட்டம் நடத்தி, முடித்துவிட்டு போய்விடுகிறோம் . இதனால யாருக்கு என்ன பயன்? போராட்ட  வடிவத்தை மாற்றி செயல்படுத்தினா என்ன?” என்று கேள்வி எழுப்பி தன்னுயிரை தீயிக்கு இறையாக்கி எழுவர் விடுதலை நெருப்பை பற்ற வைத்த செங்கொடி அத்தையின் தியாகம் நம்மோடு இருக்க.

லண்டனில் வசதியான வாழ்க்கை இருந்தும்
என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறுத்த தவறிய
உலகமே, உங்களின் மனசாட்சியை தட்டியெழுப்ப
என்னுடைய இனிய உயிரை தருகிறேன்
எனது பெயர் முருகதாசன்.
என்று கூறி தன்னுடலை தீக்கு இறையாக்கிய ஈகை போராளி மாமா முருகாதாசன் அவர்களை நினைவு கூறுகிறேன்.

என் உடலை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்’ என்று மரணிக்கும் வேளையிலும்
ஈழத்தை வாழ்த்தி முழக்கமிட்டும்,  காப்பாற்ற கோரியும் தன்னுயிரை தீயிக்கு இறையாக்கிய முத்துக்குமார் மாமாவை நினைத்து பார்க்கிறேன்.

வலைத்தளங்களில் நான் பார்த்த பொழுது எனக்கு நாட்டுப்பற்றை ஏற்படுத்திய குட்டி கண்ணன் மாமா, தன் பதினோரு வயதில் வீதி எங்கும் பாட்டு பாடி தமிழின மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்,

அவர் பாடிய வரிகளில் பாடி, ஒரு சிறிய கவிதை தொகுப்புடன் நிறைவு செய்ய விரும்புகிறேன்.

ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த பூமி”
அப்பன் ஆச்சி பாட்டன் பூட்டி சுற்றி வந்த வீதி

வீட்டுக்கொரு வீரன் போனால் விடுதலையும் நாளை வரும்
வீதியிலே சுற்றி திரிந்தால் வீணாக சாவு வரும்

ஆட்டம் போடும் ராணுவங்கள் அலறி ஓடணும்
நாம் அடிமை இல்லை என்று பரணி பாடணும்…..

அண்ணன் ஆணைக்கே தாள் பணிந்தோம்

வெல்லும் நாளுக்கே வாழ்த்துரைப்போம்

வாழ்வென்றால் இது வாழ்வுமில்லை

போரென்றால் இது போருமில்லை

வாழ்வும் சாவும் எமக்கென்றே!

மானம் தான் எங்கள் வரலாறே!

வெல்வோம் நாம் எங்கள் தாய்மண்ணே

ஆள்வோம் தமிழர்கள் எங்கள் மண்ணே

போரென்றால் புலிவீரம் பேசும்

பேச்சென்றால் தமிழ் மானம் பேசும்.

நாட்டுப்பற்று நாளில் நாம் ஒவொருவரும் உறுதி ஏற்ப்போம்.

தமிழர்கள் நாம் ஒன்றிணைவோம்
நாட்டு பற்றிணை உயிராக்குவோம்

வீரத்தோடும் தன்மானத்தோடும்

எம் இனத்தை கட்டி எழுப்பிய

எம்மின தலைவருக்கும் மாவீரர்களுக்கும்

தலை வணங்கி விடை பெறுகிறேன்.

இலக்கு ஓன்று தான் இனத்தின் விடுதலை

நன்றி வணக்கம்.

Leave a comment

Trending