தமிழ் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை(TAMILNAAC) மற்றும் அவுசுரேலிய தமிழர் பேரவை (ATC) மேற்கு அவுசுரேலியா இணைந்தும், மற்றும் மேற்கு அவுசுரேலியா தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடனும் திருவள்ளுவர் தினமான 15/01/2022 அன்று வருடாந்த தமிழர் பெருவிழா தைத்திருநாள்்சிறப்பாக நடைபெற்றது.

15/01/2022 சனிக்கிழமை மாலை 3.15 மணிக்கு Rossiter Pavilion, 16 Tuberose rd, Piara Waters WA 6112 வில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்விற்கு வருகைதந்த சிறப்பு விருந்தினர்கள் மங்கள விளக்கினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். தொடர்ந்து தமிழீழ மண்மீட்பு போரில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கும் மக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து தேசியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. அவுசுரேலிய தேசியக்கொடியினை, திரு. மகேசன் நமசிவாயம் அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து அவுசுரேலிய பூர்வகுடி மக்களின் கொடியினை திரு. றோசான் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடியினை திரு. வித்தியாகரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து சிறார்களினால் தமிழ் மொழி வாழ்த்து பாடப்பட்டது.பொங்கல் நிகழ்வை திரு சகாயநேசன் சஞ்சீவ்குமார் இணையர் ஆரம்பித்து வைக்க தொடர்ந்து சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

2022 தமிழர் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக விருது வழங்கி மரியாதை செலுத்தும் நிகழ்வு திருவள்ளுவர் தினத்தை (15/01/2022) முன்னிட்டு இம்முறை ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் ஐயா திரு.மாணிக்கவாசகர் கனகேந்திரம் அவர்களால் தமிழ் தேசிய கலை பண்பாட்டுப் பேரவையின் 2022 க்கான “செயல் மாந்தர்”விருது இலங்கை தமிழ் சங்கத்தின் ஆரம்பகர்த்தாவும் சமூக சேவையாளருமான ஐயா மதிப்பிற்குரிய திரு. இராமகிஷ்ணா சோமசுந்தரம் அவர்களுக்கு வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

சிறியோர் பெரியோருக்கான கிராமிய விளையாட்டுக்கள் சிறப்புற நடைபெற்றதை தொடர்ந்து மாலை 8:00 மணியளவில் விளையாட்டுக்களில் கலந்துகொண்டவர்களுக்கான பரிசளிப்பு இடம்பெற்றது.

தைத்திருநாளை முன்னிட்டு 08/01/2022 அன்று இடம்பெற்ற திருக்குறள் மனனப் போட்டிக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன. மேலும் 09/01/2022 அன்று நடைபெற்ற கேணல் கிட்டு வெற்றிக்கிண்ணப் போட்டிகளுக்கான வெற்றிக் கிண்ணங்களும் பதக்கங்களும் தைத்திருநாள் இறுதியில் வழங்கப்பட்டு மாலை 9.30 மணியளவில் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு தமிழர் பெருவிழா இனிதே நிறைவுக்கு வந்தது.
புகைப்பட அனுசரணை- உமாகாந்தன்































































Leave a comment