திருவள்ளுவர் ஆண்டு-2053
திருக்குறள் மனனப் போட்டி – 2022 தமிழ் தேசிய கலை பண்பாட்டுப் பேரவையின் ஒழுங்கமைப்பில் வருடாந்தம் நடைபெறும் திருக்குறள் மனனப் போட்டி இவ்வருடம் Bentley Community Centre. Nyamup way, Bentley WA 6102 எனும் முகவரியில் 08/01/2022அன்று நடைபெற்றது.

மாலை 3:15 மணிக்கு மங்கல விளக்கினை திரு. நிலக்ஷன் சுவர்ணராஜா அவர்கள் ஏற்றிவைக்க தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ரஞ்சனா பரமேஸ்வரன் அவர்களின் தலைமையுரையுடன் போட்டிக்கான நடுவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு போட்டிகள் ஆரம்பமாகின.
நான்கு பிரிவுகளில் முற்பது வரையான போட்டியாளர்கள் பங்குகொண்ட திருக்குறள் மனனப் போட்டிக்கு திரு. நிலக்ஷன் சுவர்ணராஜா, திரு.நரேந்திரன் செல்வேந்திரன் மற்றும் திரு.அலங்கேஸ்வரன் அருந்தவராஜா ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.

இந்நிகழ்வில் சிறுமி அஷ்சனா அவர்களின் மாலை கட்டுதலும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.மாலை 6:00 மணியளவில் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
திருக்குறள் மனனப் போட்டிக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் 15/01/2022 அன்று நடைபெற்ற தமிழர் பெருவிழா தைத்திருநாள் நிகழ்வில் வழங்கப்பட்டது.
























































Leave a comment