2021ம் ஆண்டுக்கான இலைதுளிர்கால சங்கமம் தமிழ் தேசிய கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் 16/10/2021 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு உதைபந்தாட்ட (Gosnells football oval) மைதானத்தில் அகவணக்கத்துடன் ஆரம்பமானது.

ஆடவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் முல்லை அணியினர் அணித்தலைவர் மணிகண்டன் இரத்தினசபாபதி தலைமையிலும், மருதம் அணியினர் அணித்தலைவர் சுதாகரன் சிவபாலன் தலைமையிலும், குறிஞ்சி அணியினர் அணித்தலைவர் யேசு ஜெறாட் தலைமையிலும் பங்கேற்றனர்.


சிறுவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் இளஞ்சோலை மற்றும் இளந்தளிர் ஆகிய இரு அணிகள் மோதிக்கொண்டன.


ஆடவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் இரண்டாம் இடத்தினை மருதம் அணியினரும் முதலாம் இடத்தினை குறிஞ்சி அணியினரும் தட்டிச்சென்றனர். இப்போட்டிகளில் சிறப்பாட்ட வீரனாக சஞ்சீவன் சந்திரன் தெரிவுசெய்யப்பாட்டார். இவர்களுக்கான கேடையங்களை துசியந்தன் வேலாயுதம் அவர்கள் வழங்கினார்.

சிறுவர்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் இரண்டாம் இடத்தினை இளந்தளிர் அணியினரும் முதலாம் இடத்தினை இளஞ்சோலை அணியினரும் தட்டிச்சென்றனர். சிறப்பாட்ட வீரனாக ரிசி கலாமோகன் தெரிவுசெய்யப்பட்டார். இவர்களுக்கான கேடையங்களை சுதாகரன் சிவபாலன் அவர்கள் வழங்கினார். மற்றும் உதைபந்தாட்டத்தில் பங்குபற்றிய அனைத்து சிறார்களுக்கும் பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.

சிறுவர்களுக்கான சங்கீதக் கதிரை போட்டியில் வெற்றிபெற்ற லோறியன் றோசான் அவர்களுக்கான பரிசினை ரவி அற்புதன் அவர்கள் வழங்கினார்.

சிறுமியர்களுக்கான சங்கீதக் கதிரை போட்டியில் வெற்றிபெற்ற கனியா நந்ததீபன் அவர்களுக்கான பரிசினை கலைமதி தனா அவர்கள் வழங்கினார்.

பெண்களுக்கான சங்கீதக் கதிரையில் வெற்றி பெற்ற வளர்மதி ரவி அவர்களுக்கான பரிசினை நிருபா பெனடிட் அவர்கள் வழங்கினார்.

மேலும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் பெரியவர்களுக்கான கயிர் இழுத்தலும் இடம்பெற்று மாலை 7.00மணியுடன் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவடைந்தன.

Leave a comment

Trending