
01.04.2021 அன்று தமிழினத்தை பெருந்துயரத்தில் ஆழ்த்திய முன்னாள் மன்னார் மறை மாவட்ட பேராயர் அதியுயர் வணக்கத்திற்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை அவர்களுக்கான வணக்க நிகழ்வு.
05.04.2021 மாலை 6.00மணிக்கு கன்னியாத்திரியர் மற்றும் பங்குத்தந்தையர் பேராயருக்கான ஈகைச்சுடரை ஏற்றிவைக்க வணக்க நிகழ்வு ஆரம்பமானது.
அகவணக்கத்துடன் பங்குத்தந்தை செபஸ்டின் அவர்களின் ஆத்ம ஈடேற்ற பிரார்த்தனை இடம்பெற்றதை தொடர்ந்து ஆண்டகை அவர்களுக்கான மலர்வணக்கம் இடம்பெற்றது.
தொடர்ந்து இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள் பற்றி ஐயா சோமசுந்தரம் (இலங்கை தமிழ் சங்கம்), பங்குத்தந்தை ஸ்ரிபன், வைத்தியர் சிந்தியா மற்றும் வித்தி ஆகியோர்கள் நினைவுரைகளை ஆற்றினர். யோன் அவர்களின் ஆண்டகை அவர்களுக்கான பாடல்களும் இடம்பெற்றன.
தமிழினம் தமக்குரிய உரிமைகளை பெற்று நின்மதியாக வாழ வேண்டும் என தன்னாலான அனைத்து வழிகளிலும் முயன்ற பற்றாளனை தமிழினம் இழந்து தவிக்கின்றது.
தமிழனப் படுகொலைக்கான நீதியை சர்வதேசத்திடம் கோருவதிலும் அதில் முக்கிய சாட்சியாக தன்னை முன்னிலை படுத்துவதிலும் முன்னின்ற தாயானவரை தமிழினம் தவறவிட்டுள்ளது
தமிழீழம் என்ற உயரிய இலட்சியத்தில் மாற்று கருத்தின்றி பயணித்த பெருந்தகை எம்மை நீங்கி சென்றுவிட்டார்.
இறுதிப் போரில் தமிழின அழிப்பு பற்றிய தனது சாட்சியத்தில் 146,679 என்ன நடைபெற்றது என்று தெரியவில்லை என்ற கருத்தை அழுத்தமாக கூறி இருந்தார்.
தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றியவர். ஆயர்களில் தன்னை தனித்துவமாக வெளிப்படுத்திய ஆண்டகை…
ஆண்டகை அவர்களின் எண்ணங்கள் நிறைவேற அவர்களின் நினைவுடன் முயற்சிப்போம்.
போன்ற கருத்துக்கள் வணக்க நிகழ்வில் நினைவுகூரப்பட்டன.
“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” உறுதிமொழியுடன் வணக்க நிகழ்வு நிறைவு பெற்றது.













Leave a comment