கேணல் கிட்டு உட்பட வங்கக் கடலில் காவியமான பத்து மாவீரர்கள் நினைவாக மேற்கு அவுத்திரேலியாவில் நடைபெற்ற மட்டைப்பந்து போட்டி.

மேற்படி நிகழ்வு அவுத்திரேலிய தமிழர் பேரவை மேற்கு அவுத்திரேலியா மற்றும் தமிழ் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை மேற்கு அவுத்திரேலியா ஒழுங்குபடுத்தலில் Armstrong Park Huntingdale WA என்னும் இடத்தில் நடைபெற்றது.

30.01.2021 காலை 7.30க்கு ஈகைச் சுடர் ஏற்றலுடன் ஆரம்பமான நிகழ்வுகள் தேசியக் கொடியேற்றல், அகவணக்கம், மலர்வணக்கத்தை தொடர்ந்து அணிகள் பிரிக்கப்பட்டு காலை 8.00மணிக்கு போட்டிகள் ஆரம்பமானது.

போட்டியில் நாயகன் அணி, மலரவன் அணி, தூயவன் அணி, நல்லவன் அணி வேலவன் அணி மற்றும் அமுதன் அணி ஆகிய ஆறு அணிகள் பங்குபற்றின.

மட்டைப்பந்து போட்டி மாலை 2.00மணிக்கு இனிதே நிறைவேறியது. இத்தொடரில் அமுதன் அணி வெற்றி கிண்ணத்தையும், இரண்டாவது வெற்றிக் கிண்ணத்தை தூயவன் அணியும் தட்டிச் சென்றன.

தொடருக்கான சிறந்த துடுப்பாட்ட வீரராக மோகன் அவர்களும் தொடருக்கான சிறந்த வீரராக சோபா அவர்களும் தெரிவுசெய்யப்பட்டார்கள். இவர்கள் அனைவருக்குமான வெற்றிக் கிண்ணங்கள் 30.01.2021 அன்று மாலை மேற்கு அவுத்திரேலியாவில் இடம் பெற்ற தைத்திருநாள் நிகழ்வில் வழங்கப்பட்டது.

Leave a comment

Trending